இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 15 அக்டோபர், 2016

எல்.ஐ.சி. பாலிசி ஒன்று இருந்தால் போதும்.. கடனை ஈசியாக வாங்கிடலாம்..!

சென்னை: உங்கள் எல்.ஐ.சி பாலிசியை வைத்து கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டுமானால், அதற்கு நீங்கள் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேலாக எல்.ஐ.சி. பாலிசியை வைத்திருப்பவர்கள் மட்டுமே கடன் பெறும் தகுதியை பெறுவார்கள். பாலிசியின் தொகை மற்றும் காலத்தை பொறுத்து கடன் தொகை மாறுபடும். இது பாதுகாக்கப்பட்ட கடன் என்பதால் மற்ற கடன்களை காட்டிலும் வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும். எப்படி விண்ணப்பிப்பது? எல்.ஐ.சி. பாலிசியை வைத்து கடன் பெறுவதற்கு ஒருவர் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த விண்ணப்பம் எல்.ஐ.சி.யின் வலைத்தளத்தில் அல்லது ஏஜென்ட் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த பாரத்தை எல்.ஐ.சி கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். பெயர் மாற்றம் பாலிசியை வைத்து வாங்கப்படும் கடனின் வரையறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் அந்த கடனுக்கான விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் இந்த பாலிசி நிறுவனத்தின் பெயருக்கு மாற்றப்படும்; அதாவது உங்கள் அசல் எல்.ஐ.சி. பாலிசியை ஒப்படைக்க வேண்டும். வட்டி விகிதங்கள் இந்த கடன்களுக்கு, வட்டி விகிதமாக 9-10 சதவீதம் வரை வசூலிக்கப்படும். இதனை அறையாண்டிற்கு ஒரு முறை கட்ட வேண்டும். கடன் தொகை இந்த பாலிசியின் கீழ் அதிகபட்ச கடன் தொகையாக, ஒப்படைத்த பாலிசியின் மதிப்பில் (போனஸின் ரொக்க மதிப்பு உட்பட) இருந்து 90% (பேய்ட் அப் பாலிசி என்றால் 85%) அளிக்கப்படும். கடன் காலம் கடன் தொகை வழங்கிய நாளில் இருந்து 6 மாதங்களே குறைந்தபட்ச கடன் காலமாகும். இந்த காலத்திற்குள் கடனை அடைக்க விரும்பினால், 6 மாத காலத்திற்கான குறைந்தபட்ச வட்டியை கட்டியாக வேண்டும். முதிர்வு / மரணம் ஒரு வேளை, கடன் வாங்கிய 6 மாத காலத்திற்குள், பாலிசி முதிர்வு பெற்றதால் அல்லது பாலிசிதாரர் மரணம் அடைந்ததால் பாலிசி கோரப்பட்டு விட்டால், முதிர்வு / மரணம் ஏற்பட்ட தேதி வரைக்கு மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். பாலிசி லேப்ஸ் காப்பீடு பாலிசியின் காலம் அல்லது விரைவான கோரிக்கையின் போது வட்டி கட்ட தவறினால், கோரிக்கை தொகையில் இருந்து கடன் தொகையும் வட்டியும் கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகை உரிமை கேட்போரிடம் அளிக்கப்படும். 3 நாட்களில் பணம்... விண்ணப்பிக்கும் வழிமுறையும் நேரத்தை விரையம் செய்யாது. ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டால், உங்கள் கணக்கில் பணம் வரவாக 2-3 நாட்களாகும்.சேவைகள்.
LIC. மூலம் நீங்கள்  இணைந்து  பயன் பெற என்னை அழைக்கவும்   P..பால்ராஜ் .LIC சென்னை திருவொற்றியூர்  CELL. NO 9789864545 . 9444764545

நன்றிகளுடன்,  P..பால்ராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக